பள்ளி வலையொளி : School Podcast

வள்ளலார் பள்ளி மாணவர்களின் தமிழ் வாசிப்புத்திறன் மற்றும் தமிழ் பேச்சுத் திறனை அதிகரிக்க ஒரு புதிய முயற்சி தான் “பள்ளி வலையொளி”.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நம் பள்ளி வலையொளி பக்கத்திலும், பள்ளியின் யூடியூப் பக்கத்திலும், மாணவர்கள் பங்கேற்கும் "பள்ளி வலையொளி" வெளியிடப்படும். தமிழ் வகுப்புகளின் பொழுதும் ஐந்து நிமிடத்திற்கு இக் காணொளி வகுப்பு மாணவர்களுக்குக் காண்பிக்கப்படும்.

பள்ளி வலையொளியில் மாணவர்கள் பங்கேற்று தங்கள் வகுப்புகளுக்கேற்ற புத்தகங்களை வாசிக்கலாம். இதில் பங்கேற்க மாணவர்களை அழைக்கிறோம்.

விதிமுறைகள்

தமிழைப்பழகு : மழலை, அடிப்படை நிலை, வகுப்பு 1 மற்றும் உயர் அடிப்படைநிலை பிரிவு  

தமிழை வாசி : வகுப்பு 2 முதல் வகுப்பு 5 வரை 

தமிழில் முழங்கு : வகுப்பு 6 முதல் வகுப்பு 8 வரை

தமிழைப்பழகு

  • மாணவர்களுக்கான கால அவகாசம் 2 முதல் 3 நிமிடங்கள் வரை.
  • தமிழ் எழுத்துக்கள்,வார்த்தைகள் ஆகிவற்றை வாசிக்கலாம்.
  • படம் பார்த்து கதை சொல்லலாம். பாடப்புத்தகங்கள் மற்றும் கதைப் புத்தகங்களையோ அல்லது வேறு புத்தகங்களையோ பயன்படுத்தலாம்.
  • மனப்பாடம்  செய்து பேசுவது அல்லது  வாசித்தல் கூடாது.

தமிழை வாசி

  • மாணவர்களுக்கான கால அவகாசம் 3 முதல் 4 நிமிடங்கள் வரை.
  • தமிழ் வார்த்தைகள், பாடல்கள், கதைகள் ஆகிவற்றை வாசிக்கலாம்.
  • படம் பார்த்து கதை சொல்லலாம். பாடப்புத்தகங்கள் மற்றும் கதைப் புத்தகங்களையோ அல்லது வேறு புத்தகங்களையோ பயன்படுத்தலாம்.
  • மனப்பாடம்  செய்து பேசுவது கூடாது.

தமிழில் முழங்கு

  • மாணவர்களுக்கான கால அவகாசம் 3 முதல் 5 நிமிடங்கள் வரை.
  • செய்யுள்,கதைகள்,செய்திகள் ஆகிவற்றை வாசிக்கலாம்.
  • ஆங்கிலம் போன்ற வேறு மொழியில் படித்த கதையை  தமிழில் மொழி பெயர்த்துப் பேசலாம்.
  • தனக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றைக் குறித்து  பேசலாம்.
  • உலக நடப்புகள் பற்றி தன்  கருத்துகள் பகிர்ந்து கொள்ளலாம்.
  • மனப்பாடம்  செய்து பேசுவது கூடாது.

மாணவர்கள் அனுப்பும் பதிவுகளில் அவர்கள் வாசிக்கும் புத்தகம்/செய்தித்தாள்/அச்சுப்பதிவு  காட்டுதல் அவசியம். கண்டிப்பாக  மனப்பாடம் செய்யக் கூடாது.

மதம் சார்ந்த பாடல்கள், கதைகள், புத்தகங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை

பரிசுகள்

  • இந்த வலையொளி ஒரு போட்டி அல்ல. நம் பள்ளி மாணவச்செல்வங்களின் வாசிப்புத் திறன் மேம்பட முன்வைக்கப்பட்ட ஒரு முயற்சி. ஆகையால் வாரம்தோறும் பதிவுகள் அனுப்புவது அவசியம்.
  • மாணவர்களை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கப்படும்
  • நம் பள்ளியின் ஆண்டு விழாவில் சிறந்த பதிவுகளுக்கான  முதல், இரண்டாம், மூன்றாம்  பரிசுகளும் அதிகமான எண்ணிக்கையில் பதிவுகள் அனுப்பிய மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படும்.

மாணவர்கள் தாங்கள் வாசிக்கும் பதிவுகளை valaiyoli@njvallalarpalli.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சலின் Subject : <Gradexx _StudentFirstNameLastName> என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

வெள்ளிக்கிழமை தோறும் வெளியிடப்படும் இந்த காணொளியை வகுப்பு நேரத்தில் ஆசிரியர்களோடு மாணவர்களும் சேர்ந்து காணலாம்.

பள்ளி வலையொளி குழுவின் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

தமிழைப் பழகி, வாசித்து, தமிழில் முழங்குவோம்