About Us

Vallalar Tamil School Inc, is a registered Non-Profit Organization in New Jersey. Vallalar Tamil School has dedicated itself to promote quality Tamil Education with the help of passionate parents as volunteers.

Vallalar Tamil School is affiliated to International Tamil Academy (also known as California Tamil Academy). We use the ITA Syllabus for teaching Tamil.

Vallalar Tamil School, which follows the ITA Syllabus, has received Accreditation from Western Association of Schools and Colleges (WASC) – More info about Accreditation

We understand kids growing in United States need a different approach in learning the classical Tamil language. We believe that Tamil learning is not a reading and writing drill. But it is about generating a love for Tamil language and Tamil culture. So, we teach Tamil through games, conversations, songs and fun filled activities to generate interest in the language in a lively class room environment.

We also conduct year end cultural activities where children perform on stage based on their areas of interest such as oratory, dance and drama.

ஓர் அறிமுகம்

முழக்கம்

நம் செம்மொழியான தமிழ் மொழியை அமெரிக்காவில் வளரும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லவும், நம்முடைய குழந்தைகள் தமிழ் பண்பாட்டினைக் கொண்டாடி தமிழ் மொழியைக் கற்கவும், பேணி வளர்க்கவும், தமிழ் இலக்கியங்களை அமெரிக்காவில் போற்றிடவும், “தமிழ் அறிவோம், தமிழராய் இணைவோம்” என்ற முழக்கத்துடன் வள்ளலார் தமிழ்ப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

தொடக்கம், நோக்கம், வளர்ச்சி...

வள்ளலார் தமிழ்ப் பள்ளி, 2015 ஆம் ஆண்டு, சித்திரைத் திருநாளில், நியூசெர்சியில் தொடங்கப்பட்டது. ஐந்து மாணவர்களுடன் ஒரு வீட்டின் அறையில் தொடங்கப்பட்ட பள்ளி, பிறகு நூலகம், தேவாலயம் போன்ற இடங்களில் உள்ள அறைகளில் இயங்கியது. தற்பொழுது வெஸ்ட் விண்ட்சர்-பிளைன்ஸ்போரோ பள்ளியில் பல வகுப்பறைகளுடன் பள்ளி இயங்கி வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் இணையம் மூலமாக பள்ளி தொடர்ந்து இயங்கியது. பல்வேறு தன்னார்வலர்களின் தொடர்ச்சியான பங்களிப்பினால் இன்றைக்கு 300க்கும் அதிகமான மாணவர்கள், 50 ஆசிரியர்களைக் கொண்டு பள்ளி வளர்ந்துள்ளது.

வள்ளலார் தமிழ்ப் பள்ளி தனக்கென ஒரு தனி முத்திரையை நியூசெர்சியில் பதித்துள்ளது. தமிழ் மொழியைக் கொண்டாட்டத்துடன் கற்கும் முறையை வள்ளலார் தமிழ்ப் பள்ளி நடைமுறை படுத்தி வருகிறது. தமிழ்க் கல்வியை வகுப்பறைகளில் பேச/எழுத/வாசிக்க மட்டுமே கற்கும் முறையை வள்ளலார் தமிழ்ப் பள்ளி மாற்றி வருகிறது. வகுப்பறை மற்றும் வகுப்பறைக்கு வெளியே நம் பண்பாடு, கலைகள், இலக்கியங்கள், தமிழிசை சார்ந்த நிகழ்வுகளுடன் இணைத்தே தமிழ்ப் பள்ளி செயல்படுகிறது.

நம் செம்மொழி

தமிழ் மொழி ஒரு பன்முகத் தன்மை கொண்ட மொழி. இரண்டாயிரம் ஆண்டுகள் இலக்கிய வளம் உள்ள செழுமையான மொழி. பழமையான மொழியாக இருந்தாலும் நவீன காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு வளரும் வல்லமை கொண்ட மொழி. அத்தகைய மொழியின் பல்வேறு பரிமாணங்களைக் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெற்றோர்களுக்கும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே பள்ளியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. அதனால் பள்ளிப் பெற்றோர்களையும் அதிகளவில் பள்ளியின் செயல்பாடுகளில் ஈடுபடுத்துகிறோம். அதன் மூலமாக அவர்களின் திறமைகளுக்குக் களம் அமைத்துக் கொடுக்கிறோம். வள்ளலார் இலக்கியக் குழு மூலம் நவீனத் தமிழ் இலக்கியங்களை பெற்றோர்கள் வாசிக்கிறார்கள். வள்ளலார் கலைக் குழு மூலம் நாட்டுப்புறக் கலைகளையும், பறையிசையும் பெற்றோர்கள் கற்கிறார்கள். இத்தகையப் பங்கேற்பினால் தமிழ் மொழி மீதான ஈடுபாடு பெற்றோர்களுக்கும் ஏற்படுகிறது. பெற்றோர்கள் மூலம் மாணவர்களுக்கும் இந்த ஆர்வம் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு நீண்டக் காலத் தாக்கம் அவர்களின் குடும்பங்களில் நிகழ்கிறது. இத்தகைய மாற்றங்கள் மூலமே தமிழ் மொழியை அடுத்தத் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல முடியும் என வள்ளலார் தமிழ்ப் பள்ளி நம்புகிறது.

வள்ளலார் தமிழ்ப் பள்ளி மொழியைக் கற்றுக் கொடுப்பதுடன் தமிழர்களையும் ஒன்றாக இணைக்கிறது. சல்லிக்கட்டுப் போராட்டம், ஹார்வேர்ட் தமிழ் இருக்கை, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நம் தாய் தமிழ்நாட்டிற்கு உதவுவது எனப் பல்வேறு வகையில் மொழிச் சார்ந்தும், பண்பாடு சார்ந்தும், சமூகம் சார்ந்தும் பள்ளி இயங்கி வருகிறது.

நியூசெர்சியில் தமிழர்களை தமிழ்க் கற்க வைத்து, தமிழர்களாக இணைக்க வள்ளலார் தமிழ்ப் பள்ளி தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த முயற்சியில் எங்களுடன் இணைய நியூசெர்சி தமிழர்களை அழைக்கிறோம்.

தமிழ் அறிவோம். தமிழராய் இணைவோம்…