New Jersey State Seal of Biliteracy

நியூசெர்சி மாநில இரு மொழி முத்திரை

இருமொழி மற்றும் பன்மொழி மாணவர்களை அங்கீகரித்து ஊக்குவிக்க, 2016 ஆம் ஆண்டு முதல் நியூ செர்சி மாநில அரசு நியூசெர்சி மாநில இரு மொழி முத்திரை (New Jersey State Seal of Biliteracy) என்ற அங்கீகாரத்தை வழங்கி வருகிறது. இரு மொழி முத்திரையைப் பெறுவதன் மூலம் மாணவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளில் சரளமாகப் பேசவும், படிக்கவும், புரிந்துகொள்ளவும், எழுதவும் முடியும் என்பதை நிரூபிக்கின்றனர்.

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் பாடத்திட்டங்களை முழுமையாகக் கற்று, தேர்ச்சி பெற்று, பள்ளியில் பட்டம் பெறும் மாணவர்கள், இரு மொழி முத்திரையைப் பெற வள்ளலார் தமிழ்ப் பள்ளி ஊக்குவிக்கிறது. இந்தத் தேர்வுகளுக்கான பயிற்சியையும் வள்ளலார் தமிழ்ப் பள்ளி அளிக்கிறது.

இரு மொழி முத்திரை பெற்ற வள்ளலார் தமிழ்ப் பள்ளி மாணவர்கள்

  • செல்வதர்சன் செல்வக்குமார் (2020-2021) – Monroe Township High School
  • ஆராதனா சண்முகம் (2023-2024) – West Windsor-Plainsboro High School South, West Windsor
  • இதயா சசிகுமார் (2023-2024) – West Windsor-Plainsboro High School North, Plainsboro
  • இனியா சசிகுமார் (2023-2024) – West Windsor-Plainsboro High School North, Plainsboro
  • ஶ்ரீராம் சுந்தரம் (2023-2024) – South Brunswick High School
  • வர்ஷினி ரமேஷ் (2023-2024) – South Brunswick High School
  • விபின் சுப்பிரமணியன் (2023-2024) – Monroe Township High School