பொங்கல் 2024 : Pongal 2024

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் முக்கிய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. பொங்கல் விழா நம் பள்ளி மாணவர்களின் மொழித் திறமையை வெளிப்படுத்தும் முக்கியக் களமாக விளங்கி வருகிறது.

கலைநிகழ்ச்சிகளிலும், போட்டிகளிலும் பங்கேற்க மாணவர்களையும், பெற்றோர்களையும் அழைக்கிறோம்.

பொங்கல் விழா நாள் : சனிக்கிழமை, பிப்ரவரி 3 ஆம் தேதி.

நேரம் : நண்பகல் 12 மணி முதல்

இடம் : Community Middle School,

95 Grovers Mill Rd, Plainsboro Township, NJ 08536

கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் பங்கேற்க இன்றே பதிவு செய்யவும்

https://forms.gle/LUkfvm2Z6pdDoPWz7

கலைநிகழ்ச்சிகளுக்கான விதிமுறைகள்

  • தமிழ் மொழியைக் கொண்டாடும் பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், தமிழிலக்கியம் சார்ந்த பாடல்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. சினிமா பாடல்களுக்கு கட்டாயமாக அனுமதி இல்லை.
  • தமிழிலக்கியம், வள்ளலார் சார்ந்த பாடல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
  • குழு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே மேடையில் அனுமதி உண்டு. ஒரு குழுவில் குறைந்தது ஐந்து பேர் இருக்க வேண்டும்.