வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது பட்டமளிப்பு விழா, சூன் 3 ஆம் தேதி, சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு இணையம் மூலமாக நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சி, பள்ளியில் தேர்ச்சி பெற்றுப் பட்டம் பெறும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பட்டம் வழங்கி சிறப்புரையாற்ற சென்னையில் இருந்து முனைவர் ப.சரவணன் அவர்கள் இணைகிறார்.
ப.சரவணன், தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர். தலைமையாசிரியராகப் பணியாற்றுகிறார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் உதவி இயக்குனராகவும் உள்ளார்.
இராமலிங்க வள்ளலாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையே நிகழ்ந்த அருட்பா மருட்பா விவாதத்தை விரிவாக ஆவணப்படுத்தியவர். சிலப்பதிகாரத்துக்கு ஆய்வுப்பதிப்பு வெளியிட்டிருக்கிறார்.
ப.சரவணன் தமிழிலக்கிய ஆய்வுலகில் முழுமூச்சான தீவிரத்துடன் தமிழ்ப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நீண்டகால ஆய்வின் விளைவாக நூல்களைப் பதிப்பிப்பவர். ஆய்வு நூல்களுக்கு அவர் எழுதும் முன்னுரைகள் விரிவான செய்திகளும், ஒட்டுமொத்தமான பார்வையும் கொண்டவை. ஆழ்ந்த தமிழ்ப்பற்றும், மரபுப்பிடிப்பும் கொண்டவர் ஆயினும் மிகையூகங்களோ உணர்ச்சிசார்ந்த அகவயப்பார்வையோ இல்லாத தெளிவான ஆய்வுமுறைமைகொண்டவை சரவணனின் நூல்கள்.
நாள் : சனிக்கிழமை, சூன் 3 ஆம் தேதி
நேரம் : காலை 10:30 மணி (EST)
இணையம் மூலமாக நேரலையில் : http://njvallalarpalli.org/live
அனைவரும் வருக !!!