தேசிய அளவிலான தமிழ்த்தேனீப் போட்டி
வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 37வது “தமிழ் விழா”, சான் ஆண்டோனியோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தமிழ்த்தேனீப் போட்டியில் (National Level Tamil Spelling Bee), வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் மாணவர்கள் தேனீ-5 பிரிவில் முதலிடம் பெற்று வெற்றிக் கோப்பையை வென்றனர்.
தேசிய அளவில் முதலிடம் பெற்ற நம் பள்ளி மாணவர்கள்
சாத்விகாஶ்ரீ சதீஷ்குமார்
ஜோயல் ரெஜின் சாந்தகுமார்
முதலிடம் பெற்று வெற்றி பெற்ற நம் மாணவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் ???❤️
இந்தப் போட்டிகளுக்காக நம்முடைய மாணவர்கள் கடும் முயற்சி எடுத்து பல நூறு தமிழ் வார்த்தைகளை பயின்று போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். நம் மாணவர்களுக்கு உறுதுனையாக இருந்து, பல மணி நேரம் பயிற்சி அளித்த நம் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் அருணகிரி சுப்பிரமணியன், சங்கீதா இராமகிருஷ்ணன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு என்னுடைய நன்றி மற்றும் பாராட்டுகள். ???❤️?
நன்றி,
சசிகுமார் ரெங்கநாதன்,
பள்ளி முதல்வர்


Leave a Reply