வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா, வரும் சனிக்கிழமை, சூன் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.
காலை 11 மணிக்கு இணைய வழி விழாவாக, பள்ளியில் தேர்ச்சி பெற்று பட்டம் பெறும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்ற புதுவையில் இருந்து பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் இணைகிறார். இவர் புதுவை மாநில கா.மா. அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றுகிறார். பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களை உள்ளடக்கிய “வள்ளலார் பட்டிமன்றக் குழுவினர்” வழங்கும் சிறப்புப் பட்டமன்றம் நடைபெற இருக்கிறது.
அனைவரும் வருக….
நாள் : சனிக்கிழமை, சூன் 11 ஆம் தேதி
நேரம் : காலை 11 மணி (EST)
இணையம் மூலமாக நேரலையில் : http://njvallalarpalli.org/live
தமிழ் அறிவோம், தமிழராய் இணைவோம்…