திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க  – Thirukural Prints

11. செய்ந்நன்றி அறிதல் (Gratitude) குறள்கள்

101

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.

பொருள்: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

English Version

102

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

பொருள்: உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தைவிட மிகப் பெரிதாகும்.

English Version

108

நன்றி மறப்பது நன்றன்று: நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

பொருள்: ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

English Version

110

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்: உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

பொருள்: எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

English Version