வள்ளலார் இலக்கியக் குழு : வீட்டின் மூலையில் ஒரு சமையலறை

எழுத்தாளர் அம்பையின் “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” என்ற சிறுகதையை முன்வைத்து, வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் இலக்கியக் குழு சார்பாக, பள்ளியின் ஆசிரியர்கள் பங்கேற்கும் மகளிர் தின சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி, சனிக்கிழமை, மார்ச் 6 ஆம் தேதி, இரவு 8:30மணிக்கு நேரலையில் நடைபெற்றது.

தமிழின் சிறந்த புதினங்களை வாசிக்கும் குழுவாக வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் இலக்கியக் குழு செயல்பட்டு வருகிறது. எழுத்தாளர் பூமணியின் “வெக்கை”, தி.ஜானகிராமனின் “அம்மா வந்தாள்”, சுந்தரராமசாமியின் “ஒரு புளியமரத்தின் கதை”, சி.சு. செல்லப்பாவின் “வாடிவாசல்”, எஸ்.ராமகிருஷ்ணனின் “துணையெழுத்து” உள்ளிட்ட பல புதினங்களைக் குழுவில் விவாதித்திருக்கிறோம். உள்ளரங்கில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி முதன் முறையாக நேரலையில் மார்ச் 6 ஆம் தேதி நடைபெற்றது.

Comments are closed.