பிப்ரவரி 21ம் தேதி உலகத் தாய்மொழி தினமாகக் கொண்டாடப்படுகிறது. நம் தாய் மொழியான தமிழ் மொழியை, அமெரிக்காவில் வளரும் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் உன்னதமான பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளுக்கும், தன்னார்வல ஆசிரியர்களுக்கும், வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நம் தாய்மொழியை, தங்களது குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க ஆர்வத்துடன் தமிழ்ப் பள்ளிகளில் இணையும் பெற்றோர்களுக்கும், நம் மொழியை மகிழ்ச்சியுடன் கற்கும் குழந்தைகளுக்கும் எங்களது நன்றி.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
– பாவேந்தர் பாரதிதாசன்