திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க  – Thirukural Prints

8. அன்புடைமை (Compassion) குறள்கள்

71

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.

பொருள்: அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

English Version

72

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்: அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

பொருள்: அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

English Version

77

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

பொருள்: எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதுபோல், அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

English Version