திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க  – Thirukural Prints

குறள் 71

அறத்துப்பால் (Virtue) - அன்புடைமை (Compassion)

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.

பொருள்: அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

What bolt can bar true love in fact
The trickling tears reveal the heart.

English Meaning: True love knows no barriers or restrictions—it cannot be hidden or contained. The tears shed by those with deep affection naturally reveal the depth of their love, transcending all attempts to conceal it. Thiruvalluvar emphasizes the power and sincerity of genuine emotions.