மகாகவி சுப்பிரமணிய பாரதியார் டிசம்பர் 11, 1882 ஆம் ஆண்டில் பிறந்து, 1921ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி தன்னுடைய 39 ஆம் வயதில் காலமானார். மிகவும் குறுகியக் காலமே இந்த மண்ணில் வாழ்ந்த பாரதி, இன்றளவும் கொண்டாடப்படும் கவிதைகளைப் படைத்துள்ளார். இந்த ஆண்டு பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவு ஆண்டாக அவரது பெருமைகளை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது.
மகாகவி பாரதியின் நினைவைக் கொண்டாடும் வகையில், அவருடைய பிறந்த தினமான டிசம்பர் 11ஆம் தேதியன்று, பாரதியின் நினைவு நூற்றாண்டு விழாவை வள்ளலார் தமிழ்ப் பள்ளி நடத்தியது. நிகழ்ச்சியின் காணொளி.