பட்டமளிப்பு விழா 2021

வள்ளலார் தமிழ்ப் பள்ளியில் இருந்து 2021ம் ஆண்டு பன்னிரண்டு மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று பட்டம் பெறுகிறார்கள். இந்தப் பட்டமளிப்பு விழா, சூன் மாதம் 12ம் தேதி, சனிக்கிழமை, காலை 10:30மணிக்கு நேரலையில் நடைபெற உள்ளது. பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக, புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் திரு.ராஜா அவர்கள் கலந்து கொள்கிறார். திரு.ராஜா அவர்களின் தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பு விழா சிறப்புப் பட்டிமன்றத்தில் நம் பள்ளியின் ஆசிரியர்கள் உரையாற்ற உள்ளார்.பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் நம் பள்ளியின் மாணவர்களை வாழ்த்தவும், பட்டமளிப்பு விழாவை கண்டு களிக்கவும் உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

நிகழ்ச்சியைக் காண : njvallalarpalli.org/live

நேரம் : காலை 10:30மணி (10:30 AM EST)

நாள் : சூன் 12ம் தேதி, சனிக்கிழமை

Comments are closed.