ஓவியப் போட்டி விதிமுறைகள்
- வள்ளலார் தமிழ்ப் பள்ளி மற்றும் பூங்கா மெய்நிகர் தமிழ்ப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
- பங்கேற்கும் மாணவர்கள் பதிவுப் படிவத்தை பூர்த்திச் செய்தல் வேண்டும் – https://forms.gle/XW95VTW6MiEvBswD7
- பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் இதில் போட்டியிடலாம்.
- வயது வாரியாக பிரிவுகள் பிரிக்கப்பட்டு, அந்த வயதிற்குட்பட்ட மாணவர்களுடன் மட்டுமே போட்டி நடைபெறும்.
- மாணவர்கள், வள்ளலார் சார்ந்து ஓவியம் வரையலாம். வள்ளலார், வள்ளலாரின் அன்பு நெறி, வாடியப் பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடினேன், வள்ளலாரின் தருமசாலை( அனைவருக்கும் உணவு வழங்குதல்) போன்றவை சார்ந்து ஓவியங்கள் வரையலாம்.
- வள்ளலார் சாராத ஓவியங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
ஓவியம் வரைவதற்கான விதிமுறைகள்
- ஓவியங்களைத் தெளிவாக, வண்ண ஓவியங்களாக வரைய வேண்டும். (Crayons / Water Colour / Acrylic / Poster / Oil Painting)
- வரைந்த ஓவியங்களை நகலெடுத்து vallalar200@njvallalarpalli.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்
- ஓவியங்கள் டிசம்பர் 4 ஆம் தேதிக்கு முன்பாக மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட வேண்டும்
- தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்கள் “வள்ளலார் 200” விழா அரங்கில், டிசம்பர் 10 ஆம் தேதி காட்சிப்படுத்தப்படும்
- பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்படும்.