குறள் 886

பொருட்பால் (Wealth) - உட்பகை (Enmity within)

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.

பொருள்: ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.

Discord in kings' circle entails
Life-destroying deadly evils.

English Meaning: If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.