குறள் 621
பொருட்பால் (Wealth) - இடுக்கண் அழியாமை (Hopefulness in Trouble)
இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல்.
பொருள்: துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.
Laugh away troubles; there is No other way to conquer woes.
English Meaning: If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.