குறள் 620

பொருட்பால் (Wealth) - ஆள்வினையுடைமை (Manly Effort)

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

பொருள்: சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.

Tireless Toiler's striving hand
Shall leave even the fate behind.

English Meaning: They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back.