குறள் 622

பொருட்பால் (Wealth) - இடுக்கண் அழியாமை (Hopefulness in Trouble)

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

பொருள்: வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

Deluging sorrows come to nought
When wise men face them with firm thought.

English Meaning: A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.