குறள் 566
பொருட்பால் (Wealth) - வெருவந்தசெய்யாமை (Absence of Terrorism)
கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும்.
பொருள்: கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.
Whose word is harsh, whose sight is rude His wealth and power quickly fade.
English Meaning: The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him.