குறள் 565

பொருட்பால் (Wealth) - வெருவந்தசெய்யாமை (Absence of Terrorism)

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.

பொருள்: எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

Whose sight is scarce, whose face is foul
His wealth seems watched by a ghoul.

English Meaning: The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.