குறள் 564
பொருட்பால் (Wealth) - வெருவந்தசெய்யாமை (Absence of Terrorism)
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும்.
பொருள்: நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.
As men the king a tyrant call His days dwindled, hasten his fall.
English Meaning: The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.