குறள் 244
அறத்துப்பால் (Virtue) - அருளுடைமை (Compassion)
மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை.
பொருள்: தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.
His soul is free from dread of sins Whose mercy serveth all beings.
English Meaning: (The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures)