குறள் 245

அறத்துப்பால் (Virtue) - அருளுடைமை (Compassion)

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி

பொருள்: அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.

The wide wind-fed world witness bears:
Men of mercy meet not sorrows.

English Meaning: This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted.