குறள் 243

அறத்துப்பால் (Virtue) - அருளுடைமை (Compassion)

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

பொருள்: அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

The hearts of mercy shall not go
Into dark worlds of gruesome woe.

English Meaning: They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.