குறள் 147

அறத்துப்பால் (Virtue) - பிறனில் விழையாமை (Not coveting another's Wife)

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்

பொருள்: அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.

He is the righteous householder
His neighbour's wife who covets never.

English Meaning: He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder.