குறள் 148
அறத்துப்பால் (Virtue) - பிறனில் விழையாமை (Not coveting another's Wife)
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு
பொருள்: பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.
They lead a high-souled manly life The pure who eye not another's wife.
English Meaning: That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.