குறள் 136
அறத்துப்பால் (Virtue) - ஒழுக்கமுடைமை (The Possession of Decorum)
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து
பொருள்: ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.
The firm from virtue falter not They know the ills of evil thought.
English Meaning: Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them.