குறள் 135
அறத்துப்பால் (Virtue) - ஒழுக்கமுடைமை (The Possession of Decorum)
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு
பொருள்: பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.
The envious prosper but ill The ill-behaved sinks lower still.
English Meaning: Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.