தமிழ் மழலைப் பாடல்கள்

வா, மழையே, வா
Rhyme Image

கத்தி கப்பல் செய்து வைத்தேன்

கால்வாய் கூடத் தோண்டி வைத்தேன்

வா, மழையே, வா

வா, மழையே, வா

 

சின்ன செடியை நட்டு வைத்தேன்

செப்புக் குடத்தை எடுத்து வைத்தேன்

வா, மழையே, வா

வா, மழையே, வா

 

வீதிப் பக்கம் வந்து நின்றேன்

மேலே மேலே பார்த்து நின்றேன்

வா, மழையே, வா

வா, மழையே, வா