தமிழ் மழலைப் பாடல்கள்

பள்ளிக்கூடப் பையிலே
Rhyme Image

பள்ளிக்கூடப் பையிலே

பாடப்புத்தகம் இருக்குது

 

பாடப்புத்தகம் இருக்குது

பலகை ஒன்றும் இருக்குது

 

பையைத் தோளில் மாட்டுவேன்

பள்ளிக்கூடம் செல்லுவேன்

 

பள்ளிக்கூடம் செல்லுவேன்

படித்த பாடம் சொல்லுவேன்

 

ஆண்டுதோறும் தேறுவேன்

அறிஞனாக மாறுவேன்

 

அறிஞனாக மாறுவேன்

அனைவருக்கும் உதவுவேன்