தமிழ் மழலைப் பாடல்கள்

அதோ பாராய் !
Rhyme Image

குதித்துக் குதித்தே ஓடும்

குதிரை அதோ பாராய்

 

அசைந்து அசைந்து செல்லும்

ஆணை இதோ பாராய்

 

பறந்து பறந்து போகும்

பருந்து அதோ பாராய்

 

நகர்ந்து நகர்ந்து செல்லும்

நத்தை இதோ பாராய்

 

தத்தித் தத்திப் போகும்

தவளை அதோ பாராய்

 

துள்ளித் துள்ளி நாமும்

பள்ளி செல்வோம் வாராய்