தமிழ் மழலைப் பாடல்கள்

டம் டம் ... டும் டும் ... கச்சேரி
Rhyme Image

காக்கா அந்தப் பக்கம் கா கா கா …

கிளி இந்தப் பக்கம் கீ கீ கீ …

 

குயில் மரத்தில் கூ கூ கூ …

கோழி கூரையில் கொக் கொக் கொக் …

 

பசுவும் கன்றும் மா மா மா …

பதுங்கும் பூனை மியாவ் மியாவ் மியாவ் …

 

மேயும் ஆடு மே மே மே …

காக்கும் நாய் லொள், லொள், லொள் …

 

டம் டம் ... டும் டும் ... கச்சேரி

நடக்குது பாரு ஊருக்குள்ளே.