தமிழ் மழலைப் பாடல்கள்

வானம் கறுத்தால் மழை பெய்யும்
Rhyme Image

வானம் கறுத்தால் மழை பெய்யும்

மழை பெய்தால் மண் குளிரும்

 

மண் குளிர்ந்தால் புல் தழைக்கும்

புல் தழைத்தால் பசு மேயும்

 

பசு மேய்ந்தால் பால் சுரக்கும்

பால் சுரந்தால் கன்று குடிக்கும்

 

கன்று குடித்து மி்ஞ்சியதைக்

கறந்து கொண்டு வந்திடலாம்

 

கறந்து கொண்டு வந்ததை

காய்ச்சி நாமும் குடித்திடலாம்