தமிழ் மழலைப் பாடல்கள்

என் பந்து
Rhyme Image

சின்ன சின்ன பந்து

சிறுமி ஆடும் பந்து

 

வண்ண வண்ணப் பந்து

வானில் பாயும் பந்து

 

குட்டிக் கையால் தட்டினால்

குதித்து ஓடும் பந்து

 

எட்டி ஓங்கி உதைத்தால்

எங்கோ போகும் பந்து