தமிழ் மழலைப் பாடல்கள்
எங்கள் மொழி நல்ல மொழி
இனிமையாக பேசும் மொழி
அன்னை சொல்லி தந்த மொழி
அன்பொழுக பேசும் மொழி
பள்ளி சென்று கற்கும் மொழி
பக்குவமாய் பேசும் மொழி
நாள்தோறும் உதவும் மொழி
நல்ல தமிழ் எங்கள் மொழி