தமிழ் மழலைப் பாடல்கள்

எங்கே போறீங்க?
Rhyme Image

கிளியக்கா கிளியக்கா

எங்கே போறீங்க?

கிளையிலே பழமிருக்கு

கொத்த போறேங்க !

 

சிட்டுக் குருவி சிட்டுக் குருவி

எங்கே போறீங்க?

சின்னச்சின்ன நெல்மணியைத்

தேடி போறேங்க!

 

ஆத்துமீனே  ஆத்துமீனே

எங்கே போறீங்க?

அருவியிலே நீச்சலடிச்சிப்

பார்க்கப் போறேங்க!

 

மயிலக்கா குயிலக்கா

எங்கே போறீங்க?

மதுரைக்குத்தான் குதிரையேறி

போகப் போறோங்க!