தமிழ் மழலைப் பாடல்கள்
தமிழ் மழலைப் பாடல்கள்
வெள்ளை முயல் ஓடுது
வேகமாக ஓடுது
குள்ள முயல் ஓடுது
குதித்துக் குதித்து ஓடுது
முத்துப் போன்ற கண்ணினால்
மேலும் கீழும் பாக்குது
தத்தித் தத்தி விண்ணிலே
தாவிக் குதிக்கப் பாக்குது
நெட்டையான காதையே
நீட்டி நீட்டி ஆட்டுது
குட்டையான வாலையே
குறு குறுன்னு ஆட்டுது