தமிழ் மழலைப் பாடல்கள்

மரம் வளர்ப்போம்
Rhyme Image

தாத்தா வைத்த தென்னையுமே,

தலையால் இளநீர் தருகிறது!

 

பாட்டி வைத்த கொய்யாவும்,

பழங்கள் நிறைய கொடுக்கிறது!

 

அப்பா வைத்த மாஞ்செடியும்,

அல்வா போல பழம் தருது!

 

அம்மா வைத்த முருங்கையுமே,

அளவில்லாமல் காய்க்கிறது!

 

அண்ணன் வைத்த மாதுளையும்,

கிண்ணம் போல பழுக்கிறது!

 

சின்னஞ்சிறுவன் நானுமொரு

செடியை நட்டு வளர்ப்பேனே.