தமிழ் மழலைப் பாடல்கள்
தமிழ் மழலைப் பாடல்கள்
குருவி பறந்து வந்ததாம்
குழந்தை அருகில் நின்றதாம்
பாவம் அதற்கு பசித்ததாம்
பாப்பா பிஸ்கட் கொடுத்ததாம்
காலில் இடுக்கிக் கொண்டதாம்
கடித்துக் கடித்துத் தின்றதாம்
களைப்பு தீர்ந்து பறந்ததாம்
காலையில் திரும்பி வந்ததாம்