தமிழ் மழலைப் பாடல்கள்
தமிழ் மழலைப் பாடல்கள்
வானத்தில் பறக்கும் பிளேனைப் பார்
மாயமாய் மறையும் அழகைப் பார்
பூமியில் வந்து இறங்குது பார்
வேகமாய் சீறி வருகுது பார்
கடலிலே கப்பல் மிதக்குது பார்
கரையைத் தேடி வருகுது பார்
கப்பலில் கொடியும் பறக்குது பார்
காற்றிலே அசையும் அழகைப் பார்
பெட்டி பெட்டியாய் செல்லும் ரயிலைப் பார்
இரும்புப் பாதையில் இயங்கும் காட்சியைப் பார்
இரவிலும் பகலிலும் இயங்கிடுமே
தூங்கும் போதும் ஓடிடுமே
விதவிதமான வாகனங்கள்
விளையாட எனக்கு வாங்கித்தாருங்கள்