தமிழ் மழலைப் பாடல்கள்
தமிழ் மழலைப் பாடல்கள்
யானை பெரிய யானை!
யார்க்கும் அஞ்சா யானை!
பானை வயிற்று யானை!
பல்லைக் காட்டா யானை!
முறத்தைப் போலக் காது!
முன்னால் வீசும் யானை!
சிறிய கோலிக் குண்டாம்!
சின்னக் கண்கள் யானை!
முன்னங் காலை மடக்கி
முட்டி போட்டுப் படுக்கும்!
சின்னக் குழந்தை ஏற்றிச்
சிங்காரமாய் நடக்கும்!