வள்ளலார் தமிழ்ப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருமே தன்னார்வலர்கள் தான். ஒவ்வொரு வாரமும் அக்கறையுடன் தமிழ்ப் பள்ளிக்கு வந்து தமிழ் வகுப்புகளை நடத்துகிறார்கள். தங்களுடைய அன்றாடப் பணி, குடும்ப வேலைகளைக் கடந்து, தொடர்ச்சியாகத் தமிழ் வகுப்புகளை எடுப்பது சவால் நிறைந்தது. இத்தகைய பல சவால்களுக்கு மத்தியிலும், அதிக விடுப்பு எடுக்காமல் ஒவ்வொரு வாரமும் தமிழ்ப் பள்ளிக்கு அர்பணிப்புடன் வரும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெயரில் ஒரு விருதினை வழங்குகிறோம்.
At Vallalar Tamil School, our teachers are dedicated volunteers who passionately conduct weekly Tamil classes while balancing professional and family commitments. Despite numerous challenges, they consistently show up for every class. To recognize those with perfect attendance, we are proud to present the Bharathidasan Award—named in honor of the esteemed poet—as a tribute to the teachers’ unwavering dedication.