பள்ளி விருதுகள்

வள்ளலார் தமிழ்ப் பள்ளியில் மூன்று முக்கிய விருதுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன.

  • வள்ளலார் விருது – ஐந்து ஆண்டுகளாகப் பணிபுரியும் ஆசிரியர்களின் தொடர்ச்சியான தமிழ்ப் பணியைப் பாராட்டி அவர்களுக்கு “வள்ளலார் விருது” வழங்கப்படுகிறது.
  • பாரதியார் விருது – தமிழ்ப் பள்ளியில் பல்வேறு முன்னெடுப்புகளில் தனித்துவமாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு பாரதியார் விருது வழங்கப்படுகிறது. பாரதியார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பள்ளியின் ஆசிரியர்களால் பரிந்துரைக்கப்பட்டு, பள்ளி முதல்வரால் பரிசீலனை செய்யப்பட்டு அவர்களின் தனித்துவமான தமிழ்ப் பணியை போற்றி வழங்கப்படுகிறது.
  • பாவேந்தர் விருது – வள்ளலார் தமிழ்ப் பள்ளி தன்னார்வலர்களால் முன்னெடுக்கப்படும் பள்ளி ஆகும். ஒவ்வொரு வாரமும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களின் அர்பணிப்பு உணர்வை பாராட்டி பாவேந்தர் விருது வழங்கப்படுகிறது.