குறள் 949
பொருட்பால் (Wealth) - மருந்து (Medicine)
உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்.
பொருள்: மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
Let the skilful doctor note The sickmen, sickness, season and treat.
English Meaning: The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).