குறள் 864

பொருட்பால் (Wealth) - பகை மாட்சி (The Might of Hatred)

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.

பொருள்: ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.

The wrathful restive man is prey
To any, anywhere any day.

English Meaning: He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.