குறள் 863
பொருட்பால் (Wealth) - பகை மாட்சி (The Might of Hatred)
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு.
பொருள்: ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.
Unskilled, timid, miser, misfit He is easy for foes to hit.
English Meaning: In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.