குறள் 850
பொருட்பால் (Wealth) - புல்லறிவாண்மை (Ignorance)
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்.
பொருள்: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
To people's "Yes" who proffer "No" Deemed as ghouls on earth they go.
English Meaning: He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth.