குறள் 823
பொருட்பால் (Wealth) - கூடா நட்பு (Unreal Friendship)
பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது.
பொருள்: பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.
They may be vast in good studies But heartfelt-love is hard for foes.
English Meaning: Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.