குறள் 819

பொருட்பால் (Wealth) - தீ நட்பு (Evil Friendship)

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

பொருள்: செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.

Even in dreams the tie is bad
With those whose deed is far from word.

English Meaning: The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams.